சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை பயன்படுத்தி பறவைகளைக் கொலை செய்த நபர்கள்
கொக்கட்டிசோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்கட்டிசோலை பொலிஸாரால் நேற்று (02.01.2025) சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் இடம் பெயர்ந்து வரும் வெளிநாட்டு அரிய வகை சுற்றுலா
பறவைகள் இலங்கையின் பல்வேறு இடங்களில் தமது வாழ்க்கையை கழிப்பது வழக்கம்.
சட்டவிரோதமாக கொலை
இவ்வாறு இடம்பெயர்ந்து வரும் பறவைகளை சட்டவிரோதமாக கொலை செய்து
வியாபாரப்படுத்தும் பல சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்கடிச்சோலை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பயணித்த
வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றினுள்
தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளும் கொலை செய்யப்பட்ட பறவைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டி சோலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.