Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு- ஐயன்கன்குளம் வைத்தியசாலை முன்பாக மக்கள் போராட்டம்

முல்லைத்தீவு- ஐயன்கன்குளம் வைத்தியசாலை முன்பாக மக்கள் போராட்டம்

0

முல்லைத்தீவு (Mullaitivu) – ஐயன்கன்குளம் வைத்தியசாலை முன்பாக கிராம மக்கள் இன்று (19) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஐயன்கன்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் நோயாளர் காவு வண்டிக்கான நிரந்தர சாரதியை நியமிக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாகவும் இரவு வேளைகளில் திடீர் நோய் நிலையின் போது உடனடியாக மல்லாவி வைத்தியசாலை கொண்டு செல்லக்கூடிய வகையில் நோயாளர் காவுவண்டிக்குரிய சாரதி நிரந்தரமாக அங்கே பணியாற்றுவதில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மக்கள் கோரிக்கை

எனவே உரிய வகையிலே குறித்த நோயாளர் காவு வண்டி சாரதியை நிரந்தரமாக நியமித்து
அடிப்படை வசதிகள் குறைந்த கிராமத்திலே நோய்வாய்ப்படுகின்ற மக்களுக்கான உரிய
சேவையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வடக்கு மாகாண ஆளுநருக்கான மனுவொன்றை குறித்த வைத்தியசாலையின் வைத்தியரிடமும் ஐயன்கன்குளம் பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரியிடமும் கையளித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version