முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்! நாடு திரும்பினார் பசில்

அமெரிக்காவில் உள்ள பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச அடுத்த வாரம் மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலை முன்னிட்டு சில முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அவர் இலங்கைக்கு திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர்த் தேர்தல் வேட்பாளர் 

கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச இலங்கைக்கு திரும்பியதை தொடர்ந்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அதிபர்த் தேர்தலின் போது, இறுதித் தறுவாயில் தனது கட்சி வேட்பாளரை அறிவித்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்! நாடு திரும்பினார் பசில் | Peramuna Next Candidate Basil

அத்துடன், தனது கட்சி கடந்த காலங்களில் பல சிக்கல்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கியிருந்தாலும், தற்போது நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான பலம் இருப்பதாக எஸ்.எம். சந்திரசேன கூறியுள்ளார்.

இலங்கையில் அதிபர்த் தேர்தல் நடைபெற மேலும் சில மாதங்கள் இருந்தாலும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை மேற்கொள்ள கட்சி மேலும் தாமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்