Home ஏனையவை வாழ்க்கைமுறை நிரந்தரமாக முகத்தை வெண்மையாக்க வேண்டுமா : செலவில்லாமல் இலகுவான வழி

நிரந்தரமாக முகத்தை வெண்மையாக்க வேண்டுமா : செலவில்லாமல் இலகுவான வழி

0

முகத்தை வெண்மையாகவும் மற்றும் அழகாகவும் வைத்துகொள்வது பெண்களின் ஒரு முக்கியமான வேலையாகவே தற்போது மாறியுள்ளது.

அதற்காக செயற்கையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிக பணம் செலவழிப்பதும் தற்போது ஒரு போக்காக மாறிவிட்டது.

இந்தநிலையில், பணம் செலவழிக்காமல் இயற்கையான முறையில் முகத்தை வெண்மையாக்குவது எப்படி என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

1. பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு  
  1. பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும்.
  2. இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.  

2. ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர்
  1. ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
  2. இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

      

3. உருளைக்கிழங்கு
  1. எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது.
  2. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.  

4. துளசி
  1. துளசியில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.
  2. முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.
  3. அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.  

5. குங்குமப்பூ
  1. குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும்.
  2. அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.  

NO COMMENTS

Exit mobile version