Home இலங்கை குற்றம் யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது

0

யாழில் (Jaffna) கசிப்பு போதைபொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பொலிஸ் விசாரணை 

இதற்கமைய, யாழ்ப்பாணம் – ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகாமையில் நீண்ட காலமாக கசிப்பு
விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது, அந்த நபரிடம் இருந்து 10 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மேலதிக விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

Source: https://tamilwin.com/article/person-arrested-with-liquid-drug-in-jaffna-1729440043

NO COMMENTS

Exit mobile version