Home இலங்கை சமூகம் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மண்ணில் புதையுண்ட நபர்!

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மண்ணில் புதையுண்ட நபர்!

0

பதுளை, ஹாலி எல, பகுதியில் மண்ணில் புதையுண்ட நபரொருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஹாலி எல, போகஹமதித்த பகுதியில் இன்று (26.05.2025) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் வீடொன்றுக்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மீட்கப்பட்ட நபர்

குறித்த நபர் மதிலை தடுத்து சரிந்து விழுந்துகிடந்த மண் மேட்டை அகற்றிக் கொண்டிருந்த போது மண்ணில் புதையுண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேவாசிகள், பொலிஸார், தீயணைப்புப் படை வீரர்களின் ஒரு மணித்தியாலம் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் பின்னர் மண்ணில் புதையுண்ட நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட நபர் உடனடியாக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மோசமாக இல்லை எனவும், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version