Home இலங்கை குற்றம் டுபாயிலிருந்து இலங்கை வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

டுபாயிலிருந்து இலங்கை வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

0

டுபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் விசாரணை 

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 14,000 சட்டவிரோத சிகரெட்டுகள் (70 காடுன்கள்) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/person-who-came-to-sri-lanka-from-dubai-arrested-1725805868

NO COMMENTS

Exit mobile version