Home இலங்கை சமூகம் வலஸ்கடாவின் தாய் தாக்கல் செய்துள்ள மனு

வலஸ்கடாவின் தாய் தாக்கல் செய்துள்ள மனு

0

காவலில் இருந்தபோது தப்பிக்க முயன்ற நிலையில் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் “வலஸ்கடா” என்று அழைக்கப்படும் திலின
சம்பத்தை, மருத்துவ பரிந்துரை இல்லாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற
வேண்டாம் என அவரது தாயார் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஊடாக கோரிக்கை
விடுத்துள்ளார்.

தப்பிச் செல்ல முற்பட்ட போது காயம்

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில்
தடுத்து வைக்கப்பட்டுள்ள திலின சம்பத், மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணைப்
பிரிவின் மூன்றாவது மாடி ஜன்னலில் இருந்து குதித்து தப்பிச் செல்ல முயன்ற
நிலையில் பலத்த காயமடைந்தார்.

இதனையடுத்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் முழுமையாக
குணமடையாததால், அவரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றுவது அவரது உயிருக்கு
அச்சுறுத்தலாக இருக்கலாம் என அவரது தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவையான முடிவு

எவ்வாறாயினும், சந்தேகநபரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விசாரணைக்காக
வெளியேற்றுவது குறித்து தேவையான முடிவுகளை எடுக்க முடியும் என்று நீதிமன்றம்
தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version