Home இலங்கை சமூகம் யாழில் எரிபொருளுக்கு வரிசை – மாவட்ட அரசாங்க அதிபரின் முக்கிய அறிவிப்பு

யாழில் எரிபொருளுக்கு வரிசை – மாவட்ட அரசாங்க அதிபரின் முக்கிய அறிவிப்பு

0

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெட்ரோல் சீராக வழங்கப்பட்டு வருகின்றதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் முண்டியடித்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே, யாழ். மாவட்ட அரச அதிபர் இந்த வேண்டுகோளை ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ளார்.

திடீரென மக்கள் வரிசை

தேவையான அளவு எரிபொருள் எடுத்துவரப்பட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது என அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 115,000 லீற்றர் பெட்ரோல்
தேவை என கணிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (17.06.2025) இத்துடன்
இணைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 264,000 லீற்றர் பெட்ரோல்
விநியோகிக்கப்பட்டுள்ளது. 

இன்று (18.06.2025) கீழ் குறிப்பிடப்பட்டுள்ள
எரிபொருள் நிலையங்களுக்கு வட பிராந்திய இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால்
250,800 லீற்றர் பெட்ரோல் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version