Home இந்தியா கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியாவின் கைகளுக்கு சென்ற பெட்ரோலியம் வளமிக்க கடல் மேடை! போட்டுடைத்த காங்கிரஸ்

கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியாவின் கைகளுக்கு சென்ற பெட்ரோலியம் வளமிக்க கடல் மேடை! போட்டுடைத்த காங்கிரஸ்

0

கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவுள்ள தீவு.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிவிட்டு அதற்கு பதிலாக நீருக்கடியில் உள்ள பெட்ரோலியம் வளமிக்க மேடைக் கடற்பகுதி இந்தியாவுக்கு வழங்கப்பட்டதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கச்சதீவு விவகாரம் தொடர்பில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று இடம்பெற்ற கடும் வாக்குவத்தின்போது காங்கிரஸ் தரப்பில் இந்த கருத்து முன்வைக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட்,

25 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள பகுதி

கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவுள்ள தீவு. அதைக் கொடுத்துவிட்டு, 25 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள வாட்ஜ் பேங்க் கடற்பகுதியில் இந்தியாவுக்கான உரிமையைப் பெற்றிருக்கிறோம்.

இன்று அந்த வாட்ஜ் பேங்க் பகுதியில் உள்ள பெட்ரோலியம் உள்ளிட்ட வளங்களுக்கான உரிமைகள் யாரிடம் இருக்கின்றன?

மத்திய அரசிடம்தானே இருக்கின்றன? அதன்மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்குச் செல்கிறது?

285 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு தீவைக் கொடுத்துவிட்டு, இந்தியாவுக்காக 25 லட்சம் ஏக்கர் கடற்பகுதியின் உரிமையைப் பெற்றிருக்கிறோம்.

இதுதான் வரலாறு. முதல் ஒப்பந்தத்தை மட்டும் பேசுபவர்கள் ஏன் 2-வது ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுவதில்லை? இந்தியாவின் பொருளாதார மண்டலத்தைப் பற்றி ஏன் பேசுவதில்லை?

இதையும் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். கச்சத்தீவைக் கொடுத்திருந்தாலும், அதற்குப் பதிலாக மிகப்பெரிய கடற்பகுதியின் உரிமையை இந்தியா பெற்றது என்பதுதான் வரலாறு.

Source: https://ibctamil.com/article/petroleum-seaplatform-given-india-for-katchatheevu-1788355261

NO COMMENTS

Exit mobile version