Home இலங்கை சமூகம் சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

0

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பகுதிக்கு செல்லும் யாத்திரீகர்கள் தமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது தொடர்பில் முறையிட இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கம்

அதன்படி, இரத்தினபுரி ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் 045 347 1122 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் 052 205 5522 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினைகளை முறையிட முடியும்.

இந்த தொலைபேசி இலக்கங்களானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version