Home இலங்கை குற்றம் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற பலரின் புகைப்படங்கள் ஜே.கே பாயின் தொலைப்பேசியில்..

ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற பலரின் புகைப்படங்கள் ஜே.கே பாயின் தொலைப்பேசியில்..

0

நாட்டை விட்டு தப்பிச்செல்லும் பாதாளஉலக குழுவினருக்கு மொரீஷியஸ் கடவூச்சீட்டை தயாரிப்பதில் கை தேர்ந்தவராக ஜே.கே பாய் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச ஆட்கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 மில்லியன் பணம் 

குறித்த மொரீஷியஸ் கடவூச்சீட்டுக்கள் துருக்கியில் தயாரிக்கப்படுவதாகவும், அதற்காக 1 மில்லியன் மற்றும் அதற்கு மேலதிகமாக பணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஜே.கே பாயின் தொலைப்பேசியின் அடிப்படையில் அவர் 20ற்கும் மேற்பட்ட கடவூச்சீட்டுக்களை தயாரித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஜே.கே பாயின் தொலைப்பேசியில் காணப்படும் புகைப்படங்களைில் உள்ள சிலர், ஐரோப்பிய நாடுகளில் இறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version