Home இலங்கை குற்றம் சிஐடியினரால் பிள்ளையானின் அலுவலகம் சுற்றிவளைப்பு

சிஐடியினரால் பிள்ளையானின் அலுவலகம் சுற்றிவளைப்பு

0

முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அலுவலகம் குற்றத் தடுப்பு புலனாய்வு மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிள்ளையானின் குறித்த அலுவலகத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று(30.05.2025) காலை 7 மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கட்டிட நிலத்தை உடைத்து தோண்டி பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள் எவரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

கருத்துக்கள் வெளியிடப்படவில்லை 

மேலும், இது தொடர்பான கருத்துக்களை குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரோ விசேட அதிரடிப் படையினரோ இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை, மட்டக்களப்பில் இரண்டு நாட்களுக்கு முன்னால் பல கோணங்களின் அடிப்படையில் பிள்ளையானின் சகாக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளர் தமிழரசு குறிப்பிட்டிருந்தார்.

மேலதிக தகவல் – குமார், பவன்

NO COMMENTS

Exit mobile version