Home இலங்கை சமூகம் பெற்றோரின் கவனயீனத்தால் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை

பெற்றோரின் கவனயீனத்தால் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை

0

முல்லைத்தீவு(Mullaitivu) மாங்குளம் கற்குவாறி பகுதியில் ஒன்றரை வயதுடைய ஆண்
குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. 

ஆரோக்கிய அன்ரனி சஞ்சித் எனும் ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தை பலி

வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த பாட்டியின் மாத்திரையை யாரும் கவனிக்காத நிலையில் குழந்தையொன்று எடுத்து நேற்று(4) மாலை விழுங்கியுள்ளது. 

 

நேற்று இரவு திடீரென குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்டதனை
தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக
சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை
பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. 

மேலதிக தகவல்: ஷான்

You May Like This..


NO COMMENTS

Exit mobile version