முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீர்க்குழாய் மூலம் கசிப்பு விற்பனை! தமிழர் பகுதியில் கைதான குடும்பஸ்தர்

முள்ளியவளையில் வீட்டு காணி ஒன்றில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து குழாய் மூலமாக விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(29) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாமூலை நீலகண்டபுரம் கிராமத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் முள்ளியவளை காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு: வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு: வெளியான மகிழ்ச்சி தகவல்

  

நீர் பொருத்தும் குழாய் மூலம் விற்பனை

இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் அவரது காணிக்குள் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து நீர் பொருத்தும் குழாய் மூலம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நீர்க்குழாய் மூலம் கசிப்பு விற்பனை! தமிழர் பகுதியில் கைதான குடும்பஸ்தர் | Pipeline And Distribution Of Liquor

குறித்த வீட்டிற்குள் சென்ற காவல்துறையினர் அங்கு நிலத்தில் புதைக்கப்பட்ட சட்டவிரோத மதுபானமான கோடாவினை அதன் மேல் குழாய் அமைப்பு செய்து வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், இரு பெரல் கோடா இதன்போது மீட்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வீட்டின் உரிமையாளரை கைது செய்த முள்ளியவளை காவல்துறையினர் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் சந்தேக நபரையும் இன்று சனிக்கிழமை (30) மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்