Home இலங்கை பொருளாதாரம் வடக்கில் முதலீடு செய்யுங்கள் : புலம்பெயர் தமிழர்களுக்கு யாழ் வணிகர் கழகம் அழைப்பு!

வடக்கில் முதலீடு செய்யுங்கள் : புலம்பெயர் தமிழர்களுக்கு யாழ் வணிகர் கழகம் அழைப்பு!

0

வடமாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு யாழ் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ் (Jaffna) வணிகர் கழக அலுவலகத்தில் நேற்று (12.04.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “வட மாகாணத்திலுள்ள காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை வளாகம், பரந்தன்
இரசாயனத் தொழிற்சாலை வளாகம், மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம் ஆகிய 3 இடங்களில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் அமையவுள்ளது.

விவசாயம் சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மீன்பிடி சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மின்சார உபகரணங்கள். தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கடதாசி சார் உற்பத்திப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், இரசாயனம் சார் உற்பத்திப்பொருட்கள் உள்ளிட்ட இலங்கையில் தடை செய்யப்படாத பொருட்களை தயாரிக்க முடியும்.

இந்த முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் நீர்வழங்கல், கழிவுநீர் முகாமைத்துவம், உள்ளக வீதி வசதிகள், மின்சார வசதிகள் என்பன கிடைக்க வசதி செய்யப்படும்.”என்றார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க…

https://www.youtube.com/embed/o7cWgmig8Lc

NO COMMENTS

Exit mobile version