Home இலங்கை சமூகம் யாழ்.போதனா வைத்தியசாலையின் சாதனை: இரண்டு துண்டாகிய கை பொருத்தி சத்திரசிகிச்சை

யாழ்.போதனா வைத்தியசாலையின் சாதனை: இரண்டு துண்டாகிய கை பொருத்தி சத்திரசிகிச்சை

0

யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital jaffna) இரண்டு துண்டுகளாக துண்டிக்கப்பட்ட கை சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி (dr sathyamoorthy) தனது சமூகவலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சையை வெற்றி

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, நீண்ட மணி நேர சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக மீண்டும் கை பொருத்தப்பட்டு இளைஞன் வீடு திரும்பியுள்ளார்.

குறிப்பிட்ட சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வைத்தியசாலை சமூகம் சார்ந்த நன்றி என வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/plastic-surgery-in-jaffna-teaching-hospital-1723857106

NO COMMENTS

Exit mobile version