Home இலங்கை அரசியல் காணி உறுதி வழங்கும் திட்டத்தை சீர்குலைக்க சதி! ரணில் பகிரங்கம்

காணி உறுதி வழங்கும் திட்டத்தை சீர்குலைக்க சதி! ரணில் பகிரங்கம்

0

உறுமய நிரந்தர காணி உறுதிகளை வழங்கும் திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். 

20 இலட்சம் ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை (Ampara) மாவட்டத்தின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியான 20,000 பேரில் 1768 பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு இன்று (25) முற்பகல் அம்பாறை வீரசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே, ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

உறுமய காணி உறுதித் திட்டம்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ”உறுமய நிரந்தர காணி உறுதித் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். 

அதேவேளை, குறித்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் சிலர் செயல்படுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

அவ்வாறான அதிகாரிகள் குறித்த தகவல்களை தமது பிரதேசத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு நான் பொது மக்களிடம் கோருகிறேன். 

தமக்குரிய காணி உறுதியைப் பெற்றுக் கொள்ளும் உரிமையைப் பறிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடைய செய்ய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version