Home இலங்கை குற்றம் விருந்துக்கு சென்ற பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட சிக்கல்!

விருந்துக்கு சென்ற பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட சிக்கல்!

0

விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாசிக்குடாவில் உள்ள விருந்தகம் ஒன்றில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட கரடியனாறு பொறுப்பதிகாரி மீண்டும் பொலிஸ் நிலையத்துக்குத் திரும்பிய போது வீதியில் நடந்துச்சென்ற ஒருவர் மீது ஜீப்வண்டி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

குறித்த பொலிஸ் அதிகாரி செலுத்திச்சென்ற ஜீப்வண்டி செங்கலடி கரடியனாறு பிரதான வீதியில் காயங்குடா பகுதியில் வைத்து பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

சம்பவத்தில் காயமடைந்த பாதசாரியும் குறித்த பொலிஸ் அதிகாரியும் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில், காயமடைந்த பாதசாரி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version