சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும்; போலி கடிதம் குறித்து இலங்கை பொலிஸ்
தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இந்த கடிதம் முழுமையாக தவறானது என்றும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும்
நோக்கத்துடனும், பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்
நோக்கத்துடனும் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போலி கடிதம்
ஆங்கிலத்தில் “convince” என்று தலைப்பிடப்பட்ட கேள்விக்குரிய கடிதம்,
செயல் பொலிஸ்; அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயர் மற்றும் போலி
கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கடிதம், கொழும்பில் அமைந்திருப்பதாகக் கூறப்படும் “சைபர் குற்றத்
தலைமையகம்” என்று அடையாளம் காணப்படாத ஒரு நிறுவனத்தையும் குறிப்பிடுகிறது.
இந்தக் கடிதம் வேண்டுமென்றே புனையப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள பொலிஸ் தரப்பு,
பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் இது தயாரிக்கப்பட்டுள்ளதாக
குறிப்பிட்டுள்ளது.

