Home இலங்கை குற்றம் போதைப் பொருள் வர்த்தகருடன் தொடர்பு! மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

போதைப் பொருள் வர்த்தகருடன் தொடர்பு! மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

0

கொழும்பு, மருதானைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பொலிசார், போதைப் பொருள் வர்த்தகர் ஒருவருடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 23ம் திகதி மருதானைப் பொலிசார் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.

 மூவரும் கைது

அவரிடம் இருந்து 11,320 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.

குறித்த போதைப்பொருள் வர்த்தகரின் கையடக்கத் தொலைபேசியை பொலிசார் சோதனையிட்ட போது மருதானைப் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தமையும், குரல் ஒலிப்பதிவுகள் வழியாக உரையாடியிருந்தமையும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போதைப் பொருள் வர்த்தகத்துக்கு ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் அவர்கள் மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version