Home இலங்கை சமூகம் பொலிஸாரின் விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

பொலிஸாரின் விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

0

 பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் விடுமுறை குறித்து விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரையில் இந்த விடுமுறை ரத்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் அனர்த்த நிலைமைகளில் ஆயத்த நிலையில் இருக்கவும் இவ்வாறு பொலிஸாரினதும் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகளினதும் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version