Home இலங்கை சமூகம் யாழில் தேர்தல் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி திடீர் மரணம்

யாழில் தேர்தல் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி திடீர் மரணம்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். வடமராட்சி (Vadamarachchi), நெல்லியடி காவல்நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தரே நேற்றைய தினம் (04) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அஜித்குமார ஜெயசுந்தர என்ற காவல்துறை உத்தியோகத்தர் யாழ் – நெல்லியடி காவல்நிலையத்தில்  கடமையில் இருந்துள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்திசாலை

தேர்தல் கடமையில் இருந்த பொழுது மயக்கம் அடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர் அனுராதபுரம், உல்பத்தகம, கல்கிரியாகம பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version