ஹட்டன் (Hatton) நீதிமன்ற வளாகத்தில் வைத்து இருபதினாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (11) ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பான வழக்கொன்றின் பிரதிவாதிகளிடம் இருந்து இருபதினாயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியல்
நீதிமன்ற வளாகத்தில் உள்ள மலசல கூடத்திற்குள் வைத்து அவர் இலஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்ட நிலையில், அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பொலிஸார் உடனடியாக குறித்த பொலிஸ் அதிகாரியை கைது செய்துள்ளனர்.
அதன் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.