Home இலங்கை சமூகம் நல்லூர் செல்வோருக்கு காவல்துறையினர் விடுத்துள்ள அறிவிப்பு

நல்லூர் செல்வோருக்கு காவல்துறையினர் விடுத்துள்ள அறிவிப்பு

0

நல்லூர் (Nallur) திருவிழாவில் நகைகளை திருடும் நோக்கில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆலய சூழலில் திருடர்களின் நடமாட்டம் காணப்படுவதால் காவல்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

காவல்துறையினர்

எனவே, ஆலயத்திற்கு தங்க நகைகளை அணிந்து வருவதை தவிர்க்குமாறும், அணிந்துள்ள தங்க நகைகளில் கவனம் செலுத்துமாறும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.

அத்துடன், காவல்துறை சீருடை மற்றும் சிவில் உடைகளில் காவல்துறையினர் ஆலய சூழல்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும், அருகில் உள்ளவர்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்தால், காவல்துறையினருக்கு உடன் அறிவிக்குமாறும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.

அதேவேளை, ஆலய சூழல்களில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version