Home இலங்கை குற்றம் கொழும்பில் நகைகளுடன் செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

கொழும்பில் நகைகளுடன் செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

0

கொழும்பில் நகைகளுடன் செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதுருகிரிய நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ​​இரண்டு பெண்கள் ஒரு பெண்ணின் தங்க சங்கிலி மற்றும் பென்டனை கொள்ளையடித்து சென்றுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட தங்க சங்கிலி மற்றும் பென்டன் மூன்றரை பவுண் பெறுமதியானதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெண்களுக்கு எச்சரிக்கை

அதுருகிரிய பகுதியை சேர்ந்த ஒரு பெண் அழகு சிகிச்சைக்காக அழகு நிலையத்திற்கு சென்றதாகவும், சலூனில் இருந்து வெளியே வந்தபோது, ​​சுமார் 70 வயதுடைய, பெண் அவரை அணுகியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த  வயோதிப பெண்ணின் கணவர் மது அருந்திவிட்டு வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் அழித்து வருவதாகவும், அவருடைய கணவரின் ஜாதகத்தை பார்க்க ஒரு இடம் தெரியுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


தங்க நகை

எனினும் அதுகுறித்து தெரியாது என கடந்து செல்லும் போது, அவரை மோதும் வகையில் பின் தொடர்ந்தால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மற்றுமொருவர் அவரை ஏமாற்றி கதைத்து நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

you may like this

NO COMMENTS

Exit mobile version