சூர்யவம்சம்
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் காலம் கடந்து மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது என்றால் அது சாதனை தான், அப்படி ரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் திரைப்படம் தான் சூர்யவம்சம்.
கடந்த 1997ம் ஆண்டு சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன், ப்ரியா ராமன், சுந்தர ராஜன், ஆனந்தராஜ், ஜெய் கணேஷ், அஜய் ரத்னம் என பலர் நடிக்க விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி இருந்தது.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே மெகா ஹிட்டானது.
நிலாவுக்கு தெரிய வந்த சோழன் பற்றிய மிகப்பெரிய உண்மை, சிக்கினார்… அய்யனார் துணை பரபரப்பு புரொமோ
நடிகை ஓபன் டாக்
இந்த படத்தில் ப்ரியா ராமன் நடிக்க கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விக்ரமன் நடிகை மோகினியை தான் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், நான் ஏன் ஹீரோவுக்கு துரோகம் பண்ற ரோல் நடிக்க வேண்டும், எனக்கு தேவயானி ரோல் கொடுங்கன்னு கேட்டேன்.
ஆனால் அவர் தேவயானி ஏற்கெனவே புக் செய்துவிட்டோம், இந்த ரோல் நீங்கள் பண்ணுங்கள் நல்ல பெயர் கொடுக்கும் என்றார்.
ஆனாலும் நான் நெகட்டீவ் ரோல் பண்ண மாட்டேன் அப்புறம் எனக்கு வில்ல ரோல் தான் கிடைக்கும் என படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக மோகினி பேட்டியில் கூறியுள்ளார்.
