எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (18.12.2025) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளாக நாட்டிற்கு எரிவாயு இறக்குமதி செய்து வந்த ஓமன் நிறுவனம் அகற்றப்பட்டு GEO GAS நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கைக்கு லிட்ரோ எரிவாயுவை அன்றிலிருந்து ஓமன் அரசாங்கம் மேற்கொண்டு வந்தது. இந்த லிட்ரோ எரிவாயுவை ஓமன் அரசாங்கம் இன்று வரை வழங்கி வருகிறது.
எனினும், முதலாம் திகதி தொடக்கம் GEO GAS என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த எரிவாயுவை கொண்டு வர GEO GAS எனப்படும் ஒரு சுவிஸ்டர்லாந்து நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
ஆனால் இன்று வரை, எந்த பிரச்சினையும் இன்றி 10 ஆண்டுகளாக எரிவாயுவை கொண்டு வந்த ஓமன் நிறுவனம் அகற்றப்பட்டு GEO GAS எனப்படும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த ஓமன் நிறுவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு எரிவாயுவையும் தரநிலை நிறுவனம் கடலின் நடுவில் இருந்து சரிபார்த்தது.
இத்தகைய நிலமைகளால் நிச்சயமாக இலங்கையில் லிட்ரோ எரிவாயு பற்றாக்குறை ஏற்படும். அதை யாராலும் தடுக்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.
