Home இலங்கை சமூகம் சாதகமான தீர்வில்லை: பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள்

சாதகமான தீர்வில்லை: பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள்

0

அஞ்சல் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஜயசுந்தர கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று (10.03.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

மேலும் கூறுகையில்,

ஊழியர் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் வேதன உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் பிரச்சினைகள் குறித்து அஞ்சல் மா அதிபருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எனினும், சாதகமான எந்த தீர்வும் எட்டப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version