Home இலங்கை சமூகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு : வெளியான அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு : வெளியான அறிவிப்பு

0

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் குறித்து அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் (Saman Sri Ratnayake) கையொப்பத்துடன் குறித்த அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) இன்று (04.04.2025) வெளியிட்டுள்ளது.

அதன்படி மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை தபால்மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு

அஞ்சல்மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற மற்றும் அதற்குத் தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு, பாதுகாப்புப் பிரிவு அலுவலர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக நிகழ்நிலை முறையில் அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களைப் பூரணப்படுத்திக்கொள்வதற்கான வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 17 ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version