Home இலங்கை சமூகம் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கும் அஞ்சல் ஊழியர்கள்

அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கும் அஞ்சல் ஊழியர்கள்

0

இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஐக்கிய தபால் தொழிற்சங்க முன்னணி (UPTUF) தீர்மானித்துள்ளதாக அதன் அமைப்பாளர் சிந்தக பண்டார (chinthaka Bandara) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

குறித்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) மேற்கொள்ளப்படவுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை 

இதேவேளை, இன்று (07) மாலை 04 மணி முதல் மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இன்று (07) நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர்  மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/postal-workers-on-strike-1720336348

NO COMMENTS

Exit mobile version