Home இலங்கை சமூகம் இலங்கையில் ஏழை குடும்பங்களின் எண்ணிகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் ஏழை குடும்பங்களின் எண்ணிகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

இலங்கையில் 2000ஆம் ஆண்டில் 11 இலட்சமாக இருந்த ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை 2010 இல் 15 இலட்சமாகவும் 2024இல் கிட்டத்தட்ட 18 இலட்சமாகவும் பதிவாகியுள்ளதாக சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். 

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான தேசிய திட்டமான ‘பிரஜா சக்தி’ என்ற தேசிய இயக்கத்தின் தொடக்க விழா குறித்து நேற்று(03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, இலங்கையில் அஸ்வெசும திட்டத்தின் கீழ் 18 இலட்சம் பேர் பயனடைவதாகவும் மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வறுமை ஒழிப்பு

இதேவேளை, ‘பிரஜா சக்தி’ தேசிய திட்டத்தின் தொடக்க விழா இன்று பிற்பகல் 2 மணிக்கு அரலியகஹா மந்திரா வளாகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது.

இலங்கையில் கிராமப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த நிறுவன கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதும், வறுமை ஒழிப்புக்கான சமூக பங்கேற்பு மேம்பாட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

NO COMMENTS

Exit mobile version