Home இலங்கை சமூகம் திடீர் மின் தடைக்கு காரணம் குரங்கா! மின்நிலைய பாதுகாப்பு அதிகாரி கூறிய விடயம்

திடீர் மின் தடைக்கு காரணம் குரங்கா! மின்நிலைய பாதுகாப்பு அதிகாரி கூறிய விடயம்

0

பாணந்துறை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக நேற்றையதினம்(9) காலை 11.15 மணியளவில் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு ஒன்று குதித்ததால் ஏற்பட்ட விபத்துதான் இந்த மின் தடைக்குக் காரணம் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

எனினும், பாணந்துறை துணை மின் நிலையத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறிய கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருந்தன.

அதாவது நேற்றையதினத்திற்கு முன்தினமளவில் பல குரங்குகள் பாணந்துறை துணை மின் நிலையத்திற்கு வந்ததாகவும் அதில் 3 குரங்குகள் மின் கம்பங்களில் அடிப்பட்டு இறந்ததாகவும் கூறியுள்ள அவர், நேற்றையதினம் குரங்குகள் எதுவும் வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.. 

NO COMMENTS

Exit mobile version