Home உலகம் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை – பீதியில் மக்கள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை – பீதியில் மக்கள்

0

ஜப்பானின் (Japan) கியூஷுவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு ஜப்பானின் கியூஷு பகுதியில் இன்று (13.01.2025) 6.9 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை

மேலும் இந்த நிலநடுக்கம் 37 கி.மீ., (23 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் ஜப்பான் மக்கள் பீதி அடைந்துள்ளதுடன் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

ஜப்பானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் திகதி, 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன, இது தென்மேற்கு தீவுகளான கியூஷு மற்றும் ஷிகோகுவை உலுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.youtube.com/embed/LUgtCSJ2RZo

NO COMMENTS

Exit mobile version