கடந்த மகிந்த ஆட்சியின் போது ஊழல் உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் அதிகளவான நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அதில் பாரதூரமான குற்றச்சாட்டுகள் மஹிந்த குடும்ப உறுப்பினர்கள் சார்ந்தவை என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மகிந்தவின் புதல்வர்கள் உட்பட அவரின் சகோததர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என ஊழல் மோசடிகள் நீண்டுகொண்டே செல்கின்றன.
அதில் மகிந்தவின் புதல்வர்களால் பலரின் சொத்துக்களை வலுக்கட்டாயமாக பெற்றுக்கொண்ட பல சம்பவங்கள் அம்பலப்படுத்தப்பட்டிருந்தன.
கொலை உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மஹிந்தவின் புதல்வர்கள் பாரிய நிதி மோசடியிலும் ஈடுபட்டதாக சிறைச்சாலை சென்று வந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் மகிந்தவின் இரண்டாவது புதல்வான யோஷித ராஜபக்ஷ, கல்கிஸ்ஸ பகுதியில் வைத்திருக்கும் சொத்து தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்…..
