பிரேம்ஜி அமரன்
பிரபல இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனின் மகன், இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு தம்பி என்ற அடையாளங்களுடன் தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் பிரேம்ஜி அமரன்.
வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் எது இருக்கிறதோ பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார். மங்காத்தா, கோட், சரோஜா, சென்னை 600 028, மாநாடு ஆகிய மாஸ் படங்களில் நடித்துள்ளார்.
நிகழ்ச்சி மேடையில் கதறி அழுதுள்ள தொகுப்பாளினி அர்ச்சனா… காரணம் இந்த போட்டோ தான், இதோ
திருமணம்
45 வயது வரை முரட்டு சிங்கிளாகவே இருந்த பிரேம்ஜிக்கும் சேலத்தை சேர்ந்த இந்து என்பவருக்கும் கடந்த ஜுன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.
அவ்வப்போது பிரேம்ஜியின் மனைவி தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வர தற்போது இருவரும் சுற்றுலா கிளம்பியுள்ளனர்.
அதாவது அவர்கள் இலங்கைக்கு சென்றுள்ளனர், அப்போது எடுக்கப்பட்ட ஒரு போட்டோவையும் இந்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். ஆனால் எங்கே செல்கிறார்கள் என்ற விவரங்கள் இல்லை.