Home சினிமா அஜித் மட்டும் தான் குட் பேட் அக்லி வெற்றிக்கு காரணம்.. பிரேம்ஜி சொன்ன நச் பதில்

அஜித் மட்டும் தான் குட் பேட் அக்லி வெற்றிக்கு காரணம்.. பிரேம்ஜி சொன்ன நச் பதில்

0

குட் பேட் அக்லி

அஜித், த்ரிஷா இணைந்து நடிக்க இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தது. இதில் வசூலில் சக்கப்போடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.

அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார். சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

சம்மர் ஸ்பெஷலாக கோலிவுட்டில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?.. லிஸ்ட் இதோ

அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தி இருந்ததற்காக 5 கோடி நஷ்டஈடு கேட்டு இளையராஜா சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

அந்த பாடல்களின் உரிமையை பெற்று இருக்கும் நிறுவனத்திடம் அனுமதி பெற்று தான் பயன்படுத்தி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் பதிலடி கொடுத்து இருந்தது.

நச் பதில் 

இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், ” 7 கோடி கொடுத்து பாட்டு போடுறீங்க, ஆனால் அது ஹிட் கொடுக்கவில்லை.

எங்கள் பாட்டை போட்ட உடன் விசில் பறக்குது, அப்போ எங்களுக்கு கூலி வரணும்ல, பணத்தாசை எல்லாம் இல்லைங்க” என பேசி இருந்தார். தற்போது, இந்த பிரச்சனை குறித்து அவரது மகன் பிரேம்ஜியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, என் அண்ணனுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் சப்போர்ட் செய்து பேசுவேன். அது போன்று தான் அவரது அண்ணனுக்கு சப்போர்ட் செய்து பேசியுள்ளார். மேலும், குட் பேட் அக்லி படம் ஹிட் ஆனதற்கு அஜித் தான் முழு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.     

NO COMMENTS

Exit mobile version