ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இதன்படி, இன்று (06) மதியம் 01.25 மணிக்கு அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அநுரகுமார திசாநாயக்க, மே நான்காம் திகதி முதல் ஆறாம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டிருந்தார்.
நாடு திரும்பினார்
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை ஜனாதிபதி மற்றும் குழுவினரை வியட்நாமின் வெளியுறவு பிரதி அமைச்சர் நுயென் மன் குவோங், இன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் நோங் தி ஹா, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டம் மற்றும் வியட்நாமிற்கான இலங்கை தூதுவர் ஆகியோர் சிறப்புற வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

