Home உலகம் பிரிவினை ஆயுதம்: மேற்கத்திய நாடுகள் மீது புடின் வைத்த அதிரடி குற்றச்சாட்டு

பிரிவினை ஆயுதம்: மேற்கத்திய நாடுகள் மீது புடின் வைத்த அதிரடி குற்றச்சாட்டு

0

ரஷ்யாவிற்குள் (Russia) மேற்கத்திய நாடுகள், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) குற்றம்சாட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விளாடிமிர் புடின், பெலாரஸ் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இஸ்லாமிய தேசம், ரஷ்யாவுக்கு எதிராகச் செயல்படும் வரையில் யாரும் அதைக் கவனிக்க விரும்பவில்லை.

வெடிப்புச் சம்பவங்கள் 

மாஸ்கோவில் வெடிப்புச் சம்பவங்கள் இன்றளவும் நடைபெறுகின்றன இவை, அனைத்தும் ரஷ்யாவுக்கு எதிராக இருக்கும் வரை யாரும் இதில் கவனம் செலுத்த விரும்புவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இதேபோன்று மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவித்ததாகவும், முன்பு பயங்கரவாதம் போன்றவை ரஷ்யாவுக்கு எதிரான ஆயுதமாகச் செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போரினால், பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைபாடுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version