ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) சீனாவுக்கு (China) உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த விஜயம் ஜனவரி மாதம் ஆரம்பத்தில் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரியில் சீனா
கண்டியில் இன்று (20) மகாசங்கத்தினரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்தோடு, மூன்றுநாள் பயணமாக ஜனாதிபதி, இந்தியா (India) சென்று அநுர அங்குள்ள முக்கிய தலைமைகளை சந்தித்துப் கலந்துரையாடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

