முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த ரணில்

தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (07) இடம்பெற்றுக்கொண்டிருக்கும் 9ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
 “நாட்டைக் கட்டியெழுப்பும் கனவை நனவாக்க சிறந்த மாற்று வழிகள் இருந்தால் முன்வையுங்கள் என்றும், அது தொடர்பில் கலந்துரையாட தாம் எப்போதும் தயாராக இருகின்றோம்.

மட்டக்களப்பில் படையெடுத்துள்ள காட்டுயானைக் கூட்டம்: விவசாயிகள் கவலை

மட்டக்களப்பில் படையெடுத்துள்ள காட்டுயானைக் கூட்டம்: விவசாயிகள் கவலை

உயர்மட்ட அதிகாரிகள்

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கத் தயாராக இருப்பதாகவும்” அதிபர் தெரிவித்தார்.

அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த ரணில் | Presidents Special Request To Political Parties

பொதுஜன பெரமுன ஒன்றிணைத்தது போன்று ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி, ஆகிய கட்சிகளும் நாட்டுக்கான பொதுவான பயணத்தில் இணையுமாறு அதிபர் மேலும் வலியுறுத்தினார்.

உலக சாதனை படைத்த இலங்கை: ரணில் பெருமிதம்

உலக சாதனை படைத்த இலங்கை: ரணில் பெருமிதம்

அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு

தவிரவும், அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கும் கூட ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

9 ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
 

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்