முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம்…! நீதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

வெகு விரைவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (Prevention of terrorism act) நீக்கப்படும், தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அநுர தரப்பு அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (27.02.2025) வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி

அவர் மேலும் உரையாற்றுகையில் “வரவு – செலவுத் திட்டத்தின் மீதான
விவாதத்தில் எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விடயதானத்துக்குப் பொறுப்பற்ற வகையில் பேசுகின்றார்கள்.
 விமர்சனங்களை மாத்திரம் முன் வைக்கிறார்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம்...! நீதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு | Prevention Of Terrorism Act Will Be Repealed Soon

இருப்பினும் ஒரு சிலர் பொறுப்புடன் செயல்படுவது வரவேற்கத்தக்கது.
தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள்
மறக்கவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று அன்றும் குறிப்பிட்டோம். 

அதேபோல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கும் நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம்.

பூகோள பயங்கரவாதம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக நீதியரசர் (ஓய்வுநிலை) ஹர்ஷ குலரத்ன தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம்...! நீதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு | Prevention Of Terrorism Act Will Be Repealed Soon

இந்த நடவடிக்கைகள் அடுத்த தேர்தல்
வரை இழுத்துச் செல்ல படமாட்டாது.
பூகோள பயங்கரவாதம் மற்றும் பூகோள நவீன சவால்கள் ஆகியவற்றை எதிர்க் கொள்ளும் வகையில் பயங்கரவாதத்து
டன் தொடர்புடைய சட்டம் விரைவில் இயற்றப்படும். 

உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் கோட்பாடுகளுக்கு அமைவாகவே புதிய சட்டம் இயற்றப்படும்.

ஆகவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டவடன் நடைமுறையில்
உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும். இந்த விடயத்தில் எவரும் அச்சம் கொள்ள வேண்டாம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You may like this

https://www.youtube.com/embed/qDSwFekSaVY

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.