Home இலங்கை சமூகம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

விலைக்குறைப்பு தொடர்பில் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவிக்கையில்,

  

மிகக்குறைந்த விலை

அரிசி, டின் மீன், சிவப்பு சீனி, பெரிய வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

குறித்த பொருட்களை சந்தை விலையை விடவும் மிகக்குறைந்த விலையில் சதொச ஊடாக இம்மாதம் முழுவதும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான விலையில் மீன்

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய மீன் (Fish) தட்டுப்பாட்டை குறைப்பதற்கு புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 300 மற்றும் 400 கிராம் Frozen Fish பொதிகள் நியாயமான விலையில் விநியோகிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தெரிவு செய்யப்பட்ட 21 ச.தொ.ச விற்பனை நிலையங்களில் ஆரம்பகட்டமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

you may like this

https://www.youtube.com/embed/eDbzSRaEzrA

NO COMMENTS

Exit mobile version