Home இலங்கை அரசியல் கொழும்பில் சீன மருத்துவ கப்பலுக்கு சென்ற பிரதமர் ஹரிணி

கொழும்பில் சீன மருத்துவ கப்பலுக்கு சென்ற பிரதமர் ஹரிணி

0

கொழும்பு(colombo) துறைமுகத்தில் தற்போது தரித்து நிற்கும் சீன(china) கடற்படைக்கு சொந்தமான வைத்தியசாலை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய(harini amarasuriya) இன்றையதினம் பார்வையிட்டார்.

கடந்த 21ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பல், இம்மாதம் 27ஆம் திகதி வரை இலங்கை மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்கி வருகிறது.

சீன அரசாங்கத்திற்கு பாராட்டு

இந்த மருத்துவ கப்பலை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மனிதாபிமான முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கை மக்களுக்கு இந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதற்காக சீன அரசாங்கத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கும் பொது சுகாதாரத்துக்கு ஆதரவளிப்பதற்கும் இத்தகைய முயற்சிகளின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

கப்பலில் உள்ள நவீன வசதிகள்

இலங்கைக்கும்(sri lanka) சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கப்பலின் பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சீனத் தூதுவர், கப்பலில் உள்ள நவீன வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து கப்பலின் மருத்துவக் குழுவினர் இதன்போது விளக்கமளித்தனர்.

 

NO COMMENTS

Exit mobile version