Home இலங்கை சமூகம் மாணவனை கடுமையாக தாக்கிய பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி

மாணவனை கடுமையாக தாக்கிய பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி

0

பாடசாலை மாணவன் ஒருவனை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டிற்காக பொலன்னறுவை பகுதி பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மெதிரிகிரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான அதிபரை, அடுத்த மாதம் 11 ஆம் திகித வரை விளக்கமறியலில் வைக்க ஹிங்குராக்கொடை பதில் நீதவான் நாலக மிஹிர பண்டார உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த மெதிரிகிரிய காவல்துறையினர், தாக்குதலுக்குள்ளான 17 வயது மாணவன், தான் படித்து வந்த பாடசாலையின் அதிபர் பாடசாலை நேரத்தில் தன்னை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேக நபரை விசாரித்து கைது செய்ததாக கூறியுள்ளனர்.

விசாரணை

அத்தோடு, தாக்குதலினால் மாணவனின் காதில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்ததாகவும், மெதிரிகிரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதற்கு முன்னதாகவும் மாணவனை குறித்த அதிபர் பல்வேறு சந்தர்ப்பங்களின் போது சித்திரவதைகளுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஹிங்குராக்கொட வலயக் கல்வி அலுவலகமும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அதிபர் மீதான விசாரணைகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version