Home சினிமா திருமணத்திற்கு பிறகு புதிய விஷயத்தை அறிவித்த பிரியங்கா தேஷ்பாண்டே.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

திருமணத்திற்கு பிறகு புதிய விஷயத்தை அறிவித்த பிரியங்கா தேஷ்பாண்டே.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

0

பிரியங்கா

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.

இவர் எந்த நிகழ்ச்சியில் வந்தாலும் கலகலப்பாக இருக்கும், அதிலும் இவரது டிரெட் மார்க் ஷோ என்றால் அது சூப்பர் சிங்கர் தான்.

இவரும் மாகாபா ஆனந்தும் இணைந்து தொகுத்து வழங்கிய அனைத்து ஷோக்களும் செம ஹிட்.
கடந்த ஏப்ரல் மாதம் திடீரென மறுமணம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருந்தவருக்கு சமீபத்தில் காலில் Fracture ஏற்பட அந்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

புதிய ஷோ

இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா ஒரு சூப்பரான தகவல் வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் விஜய் டிவியில் தனியாக தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் 6வது சீசன் விரைவில் தொடங்க இருக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கலகலப்பான புரொமோவை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version