Home சினிமா அந்த முடிவுக்கு காரணம் பிரியங்கா அக்கா தான்.. பிக் பாஸ் அன்ஷிதா உடைத்த ரகசியம்

அந்த முடிவுக்கு காரணம் பிரியங்கா அக்கா தான்.. பிக் பாஸ் அன்ஷிதா உடைத்த ரகசியம்

0

 பிக் பாஸ்

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முடிவு பெற்று வெற்றியாளராக முத்துக்குமரனும் ஜெயித்துவிட்டார். 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கான சம்பளத்தை தாண்டி பெரிய பரிசுத் தொகையையும் பெற்றுக் கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து அன்ஷிதா மற்றும் விஷால் குறித்து பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அன்ஷிதா இறுதி நிகழ்ச்சியில் தன் காதல் குறித்து பேசிய விஷயம் தான்.

உடைத்த ரகசியம் 

இந்நிலையில், அன்ஷிதா இது குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், ” நான் பாசத்திற்காக ஏங்குபவள், அதனால் அந்த நபரிடம் நான் முதலில் அன்பிற்காக பலமுறை கொஞ்சியுள்ளேன்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா

ஆனால், பிக் பாஸ் சென்ற பின் தான் எனக்கு தோன்றியது. காதல் யாரையும் கொஞ்ச வைக்காது என்று. ஒருமுறை பிரியங்கா அக்கா என்னிடம் ஒரு விஷயத்தைக் கூறினார்.

அதாவது, எப்போதும் நம்மை எதற்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது. சுயமரியாதையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது என்று கூறினார். அவரது அந்த வார்த்தை தான் நான் அந்த நபரிடம் சென்று வேண்டாம் என்று கூற தைரியத்தை கொடுத்தது” என்று கூறியுள்ளார்.       

NO COMMENTS

Exit mobile version