முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதுக்குடியிருப்பில் மரணவீட்டில் கைகலப்பு : 5 பேர் காயம் ஒருவர் ஆபத்தான நிலையில்

முல்லைத்தீவு (mullaitivu) மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட
சுதந்திரபுரம் மத்தி கிராமத்தில் மரணவீடு ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர்
காயமடைந்த நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றுமுன்தினம் 29.03.2024 மரணவீடு ஒன்றின்
இறுதி நிகழ்வின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைலப்பாக மாறியதில் 5 பேர்
காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான
மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சுதந்திரபுரம் மத்தி பகுதியினை சேர்ந்த 61 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த
தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறியபோது தவறிவீழ்ந்து
காயமடைந்த நிலையில் 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் மரணவீட்டில் கைகலப்பு : 5 பேர் காயம் ஒருவர் ஆபத்தான நிலையில் | Problem In Funeral House In Mullaitivu

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

அவரின் இறுதி நிகழ்வுகள் சுதந்திரபுரம் மத்தி பகுதியில் உள்ள அவரின் வீட்டில் நடைபெற்றுள்ளது.

இதற்கு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து அவரின் உறவினர்கள் வருகை
தந்துள்ள நிலையில் அவர்களுக்கும் சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அது பின்னர் கைகலப்பாக மாறி கொட்டான்கள் கத்திகள் கொண்டு தாக்குதல்
சம்பவங்கள் இடம்பெற்றுள்ன.

இதன்போது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து வருகை தந்த உறவினர்களின்
மூவருக்கும் சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த இளைஞர்களில் மூவரும்
படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த ஒருவர் தீவிர சிகிச்சைக்காக யாழ்.போதான
மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டுவருகின்றார்கள்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்