Home சினிமா ஒரு படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் செய்த விஷயம்.. மேடையில் தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

ஒரு படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் செய்த விஷயம்.. மேடையில் தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

0

ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியவருக்கு முதல் படமே செம ஹிட் கொடுத்தது. அதற்கு முன் ஜென்டில்மேன் என்ற படத்தில் பாடகராக அறிமுகமானவர் இப்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்.

ரஜினி, விஜய் வழியில் களமிறங்கிய தனுஷ்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹேப்பி நியூஸ்

செய்த விஷயம்

தற்போது, இவர் நடிப்பில் பிளாக்மெயில் என்ற படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஜெய்க்கொடி அமல்ராஜ், ஜி.வி.பிரகாஷ் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” பிளாக்மெயில் படத்திற்காக நான் யாருக்காவது நன்றி சொல்ல வேண்டுமென்றால் ஜிவி பிரகாஷுக்குத்தான் சொல்ல வேண்டும். நிதி பற்றாக்குறை காரணமாக எட்டு நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருந்தது.

ஜிவிதான் அதை முடிக்க எங்களுக்கு உதவினார். நடிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதற்கு முன்பே சம்பளத்தையும் கேட்பதாக கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஜிவியோ படத்துக்கு பேசப்பட்ட சம்பளத்தில் பாதிதான் பெற்றார்” என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version