முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முட்டையில் விலை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அதிகரிக்கப்படமாட்டாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கோழி வளர்ப்பில் 2022இல் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் நாடு தற்போது அதிலிருந்து மீண்டு, 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, மாதமொன்றுக்கு 6 இலட்சம் என்றளவில் முட்டை உற்பத்தி அதிகரித்து வருகிறது.

தேங்காய் பால் ஏற்றுமதி: அதிகரிக்கும் வருமானம்

தேங்காய் பால் ஏற்றுமதி: அதிகரிக்கும் வருமானம்

முட்டை விலை 

உண்மையிலேயே, முட்டையின் விலை 30 ரூபாயாக குறையும் நிலை கூட உண்டாகும். இது எமது தொழில் துறையில் பாரியதொரு வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.

முட்டையில் விலை தொடர்பில் வெளியான தகவல் | Production Of 6 Lakh Eggs Per Month In Sl

மதிய உணவுத் திட்டத்தில் முட்டையை சேர்க்க வேண்டும் என்பதோடு, முட்டைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் ஆராயும்படி அரசாங்க தரப்பிடம் கோரியுள்ளோம்.” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கோழித் தீவனத்தின் விலை தற்போது 180 ரூபாயாக குறைந்துள்ளது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தவரின் நுரையீரலில் இருந்த பொருள்

நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தவரின் நுரையீரலில் இருந்த பொருள்

கோழித் தீவனத்தின் விலை

கோழி முட்டை விற்பனை பற்றி அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ”2022இல் 240 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த ஒரு கிலோ கோழித் தீவனத்தின் விலை தற்போது 180 ரூபாயாக குறைந்துள்ளது.

முட்டையில் விலை தொடர்பில் வெளியான தகவல் | Production Of 6 Lakh Eggs Per Month In Sl

ஆகவே, விவசாயிகளுக்கு 40 ரூபாய் கிடைத்தால் எம்மால் இந்த தொழிலை தொடர முடியும். முட்டையின் விலை 35 ரூபாயாக குறைந்தால் சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வர்.

கடந்த 2023ஆம் ஆண்டு அரசாங்கம் அதிகமான கோழிகளை இறக்குமதி செய்ததன் விளைவாக, 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முட்டைகளினதும் கோழிக் குஞ்சுகளினதும் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கக்கூடும்” என தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே பலியான 16 வயது மாணவன்

மட்டக்களப்பில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே பலியான 16 வயது மாணவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்